Sunday, September 14, 2008

பாக்ஸ் ஆபிஸை எம்.ஜி.ஆர்.

இறந்து இத்தனை வருடங்கள் கழிந்த பின்பும் வசூலில் அவர் இன்றும் முடிசூடா மன்னர். சென்ற வருடம் அவர் நடித்த சில படங்களை புதுப்பொலிவுடன் ரிலீஸ் செய்தனர். ஆச்சரியம்....முப்பது வருடங்களுக்கு முனபிருந்ததுபோல் முண்டியடித்தது கூட்டம்.
இந்தியில் பழைய படங்களை கலருக்கு மாற்றி திரையிடுவது தொடர்ந்து நடந்து வருகிறது. அப்படி வெளியான 'மொக இ ஆசாம்' இந்தியா மட்டுமின்றி பாகிஸ்தானிலும் அமோக வரவேற்பை பெற்றது.
இதனை மனதில் வைத்து எம்.ஜி.ஆர். நடித்தப் படங்களை டிடிஎஸ் ஒலி சேர்த்து கலர்ஃபுல் கிராபிக்ஸூடன் புதுப் படம்போல் வெளியிட தயாராகிறது டைமண்ட் பிலிம்ஸ் நிறுவனம்.

முதல் கட்டமாக 1973-ல் எம்.ஜி.ஆர் இயக்கி நடித்த 'உலகம் சுற்றும் வாலிபன்' டிடிஎஸ், கிராஃபிக்ஸ் கலக்கலுடன் தமிழகம் முழுக்க வெளியாகிறது. எம்.ஜி.ஆர் படங்களை தொடர்ந்து சிவாஜியின் படங்களையும் பாலிஷ் செய்து வெளியிடும் முனைப்பில் இருக்கின்றனர்.
இந்த பழைய சூப்பர் ஸ்டார்கள் பாக்ஸ் ஆபிஸை கைப்பற்றினாலும் ஆச்சரியமில்லை!
Related Posts Plugin for WordPress, Blogger...