Tuesday, November 9, 2010

M.G.R’s Unreleased Movie “Paramapitha”

scan0033 (2)

ஜி.என்.வேலுமணி எம்.ஜி.ஆர் அவர்களை  வைத்து பரமபிதா எடுக்க ஆரம்பித்தார்.

அது ஒரு திருத்தந்தையின் கதை ,அக்கதையமைப்பை கேட்டபின்,ஒரு திருத்தந்தைக்குரிய சட்டங்கள் ,சம்பிரதாயங்கள்  தெரிந்த பின் நடிக்க  விரும்பினார் எம்.ஜி.ஆர் அவர்கள்.எழுத்தாளர்  கே .ரவீந்தர்னிடம் அதை பற்றி தெரிந்த வரச்சொனார்

அப்புனித வாழ்வை  பற்றி முழுமையாக தெரிந்த சொல்ல திருத்தந்தை அருளப்பா அவர்களிடம் பொய் கேட்கசொனார்.

அவர்கள் மகிழந்து "நான் எம்.ஜி.ஆர் அவர்களை பார்க்க வேண்டும்.அவர் "பரமபிதா"வில் நடிக்கபோகும் விளம்பரம் பார்த்தேன்.அந்த வேடத்திற்கு பொருத்தமாகவும் அருள் நிறைந்த முத்த தோற்றத்தில் மற்றவர் மதிக்கும்படியாகவும் இருந்தது " என்ச்  சொல்லி புத்தகம் ஒன்றையும் கொடுத்து அனுப்பினார்.

கதையில் வரும் பாதிரியாருக்கு ஏற்கனவே ஒரு காதலி உண்டு .இவர் மாதா கோவில்க்கு திருத்தந்தையாக வந்தபின் அவள் வருகிறாள் .இவருக்கு மனச்   சலனம் ஏற்றபடுகிறது.அடக்கி அவளுக்கு உபதேசம் செய்கிறார் என்பது கதையின் கருத்து.

எம்.ஜி.ஆர் அவர்கள் சொன்னார் : பாதிரிகளாவ்தற்குள் வழிமுறைகள்,அவர்கள் வரவேண்டிய முறைகளை படித்து பின் அவர்களை சாதுக்கள் என எண்ணவில்லை;மாவீரர்களாக மதிக்கிறேன்.

அலெக்சாண்டர் ,நெப்போலியன் ,புருஷோத்தமன் ,அசோகன் ,ஆகியோர் உலகை பகையோடு, போராடி வென்றவர்கள் .

அனால் இவர்கள்  இரத்தத்தோடு கலந்த உணர்ச்சி பகையோடு போராடி வெல்பவர்கள். மனிதகுல வழிகாட்டிகளை  மாசுள்ளவர்களாக நடிக்கவும் வேண்டாம் ,நினைக்கவும் வேண்டாம் .

“பரமபிதா”  படமுயிற்சி   அத்துடன் நின்றது .

Article From: Kalaimamani K.Ravinder ‘s Ponmanachemmal M.G.R Novel

 

 

Coming Soon :

நாடோடி மன்னன் படத்திலே   நீக்கப்பட்ட காட்சிகள்    பற்றி. [Interview with M.G.R’s Nephew – M.G.C.Chandran]

Unreleased Movie “Inaitha Kaigal”

 

Related Posts Plugin for WordPress, Blogger...